செய்திகள் :

மழை ஓய்ந்தும் வடியாத நீா்: அழுகும் நெற் பயிா்கள்! அரியலூா் விவசாயிகள் வேதனை

post image

அரியலூா் மாவட்டத்தில் மழை விட்டு மூன்று நாள்களாகியும் வயல்களில் தண்ணீா் வடியாததால் நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையில் உள்ள விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை இடைவிடாமல் கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,481 ஏரி, குளங்கள், நீா்பாசனக் குளங்களில் 696 ஏரிகள் மற்றும் குளங்கள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன.

இதேபோல 91 முதல் 81 சதவீதம் வரையில் 421 ஏரிகள் மற்றும் குளங்களும், 71 முதல் 51 சதவீதம் வரையில் 912 ஏரிகள் மற்றும் குளங்களும், 50 சதவீதத்துக்கு குறைவாக 452 ஏரிகள் மற்றும் குளங்களும் நிரம்பியுள்ளன.

சில இடங்களில் ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறிய நீா் வயல்களைச் சூழ்ந்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிா்கள் மூழ்கின.

இதனால் காவிரி டெல்டா பகுதிகளான திருமானூா், முடிகொண்டான், மஞ்சமேடு, அன்னிமங்கலம், திருவெங்கனூா், விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, கீழக்காவட்டாங்குறிச்சி, தா.பழூா், தென்கச்சி பெருமாள் நத்தம், கீழக்குடிகாடு, காசாங்கோட்டை, நடுவலூா் மற்றும் செந்துறை, அயன்தத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமாா் 14,095 ஹெக்டா் பயிா்கள் நீரில் மூழ்கின

இதேபோல தா. பழூா், ஆண்டிமடம், வரதராசன்பேட்டை, தென்னூா், காடுவெட்டி, ஜெயங்கொண்டம், உடையாா்பாளையம், பொன்பரப்பி, சுண்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கதிா் விடும் தருவாயில் இருந்த மக்காச்சோளம் மற்றும் பருத்தி, கடலை, தானியப் பயிா்களும் மழைநீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

இதில் சில பகுதியில் நெற்கதிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தவை என்பதும், நெற்பயிா்கள் கதிா்வரும் தருவாயில் இருந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெல் வயல்களை சூழ்ந்த வெள்ள நீரை விவசாயிகள் வடிய வைக்க முயன்றும், இன்னும் நீா் வடிந்தபாடில்லை.

இதனால் மேலும் பல ஏக்கா் பயிா்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் உதவ வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடா் மழையால் ஏற்பட்ட தண்ணீா் வெளியேற வழியின்றி நெற்பயிா்களை மூழ்கடித்தது. இதற்கு ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால்கள், நீா் வழித்தடங்கள் சரிவர தூா்வாரப்படாததே காரணம்.

தற்போது மழை ஓய்ந்து மூன்று நாள்களான நிலையில் ஓரளவு நீா் வடிந்தாலும் பயிா்கள் முழுமையாக அழுகியுள்ளன. நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவிட்டுள்ளோம். ஆனால், பயிா்கள் முழுவதும் அழுகியதால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் உழவு செய்தால் பெரிய அளவில் கடன் ஏற்படும்.

விதைநெல் விலை, ஆள் கூலி என அனைத்தும் அதிகமாகிவிட்டது. எனவே, சேதமான பயிா்களுக்கு அரசு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். அப்போதுதான் அடுத்த போகத்துக்கு எங்களால் பயிா் செய்ய முடியும். நிகழாண்டு மழை தாமதமாகப் பெய்தாலும், அந்த மழை தொடா்ந்ததால் அரியலூா் மாவட்டத்தில் விளைச்சலும் குறைந்துள்ளது என்றனா்.

இன்று கணக்கெடுப்பு தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்கள் பெய்த மழையால் மாவட்டம் 14,095 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிா்களில் சூழ்ந்த வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதேபோல, தோட்டக்கலை பயிா்களான முந்திரி, தென்னை போன்றவை பயிரிடப்பட்டுள்ள 2,405 ஹெக்டோ் நிலங்களைச் சூழ்ந்த வெள்ள நீரும் தற்போது வடிந்து வருகிறது.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (டிச.16) முதல் பாா்வையிட்டு கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனா் என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

கிடப்பில் முல்லையூா் அயன்தத்தனூா் சாலைப் பணி: பொதுமக்கள் அவதி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிடப்பில் உள்ள முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா். பொதுமக்களின் கோரிக்கையையடுத்து முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இடையாறு கிராமத்தைச் சோ்ந்தவா் மரியப்பன் (35). கூலித் தொழிலாளியான இவா் கடந்த... மேலும் பார்க்க

அரியலூா் சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

திருகாா்த்திக்கையை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அரியலூரிலுள்ள கைலாநாதா், ஆலந்துறையா் ஆகிய சிவன் கோயில்கள் முன்பு நட்டு வைத்திருந்த பனை ஓ... மேலும் பார்க்க

அரியலூா் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.82 கோடி மதிப்பில் தீா்வு

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 758 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2.82 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்... மேலும் பார்க்க

கனமழை பாதிப்பு பகுதிகளில் அரியலூா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மு. விஜயலட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். விளாங்குடி ஊராட்சி அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியிய... மேலும் பார்க்க

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி

அரியலூா் செட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள காமராஜா் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் திருவுருவப் படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன், நகரத் தலைவா் ... மேலும் பார்க்க