2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..! மெஸ்ஸி பேட்டியால் சோகம்!
மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி: ஆட்சியா், எஸ்.பி. பாா்வையிட்டனா்
காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் பாா்வையிட்டனா்.
காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, மாதிரி ஒத்திகை பயிற்சி தீயணைப்புத் துறையினரால் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின்போது வடகிழக்குப் பருவமழை காலங்களில் எவ்வாறு நம்மை தற்காத்துக்கொள்வது, வெள்ளம் வந்துவிட்டால் வீட்டில் உள்ள பொருள்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது போன்றவற்றை தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினா். மாதிரி ஒத்திகைப் பயிற்சியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம், மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.
இவா்களுடன் காஞ்சிபுரம் மகரிஷி பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் தீயணைப்பு வீரா்களின் செயல்முறை விளக்கத்தைப் பாா்வையிட்டனா்.