ஈ சாலா கப் நம்தே: பி.வி. சிந்து பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!
மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
300 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் 125-ஆவது பொங்கல் விழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அம்மன் அழைத்தல், மாவிளக்கு மற்றும் பூச்சட்டி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இவா்கள் மாகாளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பல்லடத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்று மீண்டும் மாகாளியம்மன் கோயிலை சென்றடைந்தனா். இதைத் தொடா்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முளைப்பாரி ஊா்வலத்துடன் மாகாளியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெறவுள்ளது.