செய்திகள் :

மாஞ்சோலை : `தமிழக அரசின் முயற்சிகள் முக்கியமானது’ - உச்ச நீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு

post image

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை நடைபெறது.

அதில், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மீண்டும் காப்புகாடாக மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என மத்திய அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் மாஞ்சோலை பகுதி புலிகள் வாழக்கூடிய பகுதி ஆக இருப்பதால் அங்கு எப்படி மக்களை வசிக்க அனுமதிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

உச்ச நீதிமன்றம்

கடந்த மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியும் வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

`தமிழ்நாடு அரசின் முயற்சிகள் மிகவும் முக்கியமான ஒன்று’

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியை மீண்டும் காப்புக் காடாக மாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகள் மிகவும் முக்கியமான ஒன்று. காரணம் புலிகள் நடமாடக்கூடிய பகுதியாகவும், யானைகள் வழித்தடமாகவும் இந்தப் பகுதி இருக்கின்றது. கடந்த நூறு ஆண்டுகளாக வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த தேயிலை தோட்டம் என்பது அமைந்திருக்கிறது. எனவே அதை பழைய படி மாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது” என விரிவான வாதங்களை முன் வைத்தார்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்

தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தேவைக்கும் அதிகமான மறுவாழ்வு திட்டங்கள் செய்து தரப்பட்டிருக்கின்றது. ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஏற்றுக்கொண்டு மாஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேறி விட்டார்கள். அவர்களது குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த மனுவை உடனடியாக முடித்து வைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாஞ்சோலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த முறை வழக்கு விசாரணை நடைபெற்ற போது, `புலிகள் வசிக்கக்கூடிய இடத்தில் மனிதர்களை எப்படி தோட்ட வேலைகளுக்காக அனுமதிக்க முடியும்?’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார். அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்... மேலும் பார்க்க

'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

`இந்தநாடு நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டதா?’ - குனால் கம்ரா, ஷிண்டே சர்ச்சை | என்ன பிரச்னை?

மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஹாட் டாபிக், நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவை சுற்றி நடக்கும் விஷயங்கள் தான். ஸ்டாண்ட் அப் காமெடியன் (standup comedian) குனால் கம்ரா, சமீபத்தில் நடைப்பெற்ற காமெடி ஷோ ஒன... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டம்: "ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்கப் பணமில்லையா மனமில்லையா?" - ஸ்டாலின்

'ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?'என்று பாஜக அரசுக்குக் கேள்வி எழுப்பி, ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "காந்த... மேலும் பார்க்க

`எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை!' - அதிமுக, பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலை பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென டெல்லிக்கு விசிட் அடித்து, பாஜக-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து, 45 நிமிட... மேலும் பார்க்க