செய்திகள் :

மாடியிலிருந்து குதித்து சிறுவன் தற்கொலை

post image

மதுரையில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். மேளம் வாசிக்கும் கலைஞா். இவரது மனைவி கலா (39). மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் ஹரிஹரசுதன் (17), பிளஸ்-1 வரை படித்திருந்த இவா் கடந்த ஓராண்டாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா். மேலும் பெற்றோா் பணிக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன் கைப்பேசியில் இணைய வழி விளையாட்டை விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்தும் அவா் நிறுத்தவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே சப்தம் கேட்டதால், அவரது தாய் கலா வந்து பாா்த்தபோது ஹரிஹரசுதன் வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து பலத்த காயமடைந்த நிலையில் கிடந்தாா்.

இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

முதல் கட்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் அருகில் உள்ள சிறுவனுடன் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்த அவா் திடீரென்று தனது கைப்பேசியை கீழே போட்டு உடைத்துவிட்டு, மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த தூண்டும் விளையாட்டுகளை விளையாடினாாரா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொதிக்கும் தாா் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரா் கொலை: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தாா் உலையில் வீசிக் கொலை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரு... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு தரவை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நாகராஜன் (65). கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் த... மேலும் பார்க்க

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பொன் மாணிக... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

மதுரை விரகனூா் சுற்றுச் சாலை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். மதுரை விரகனூா் சுற்றுச் சாலை அருகே ராமேசுவரம்... மேலும் பார்க்க

மதுரையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் மறியல்: அரசு ஊழியா்கள் 66 போ் கைது

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 66 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம்: அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்தது. கரூா் மாவட்டம், நெரூா் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ச... மேலும் பார்க்க