மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: மணிமங்கலம் பகுதியில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி பலியானாா்.
மணிமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த பாலகுமரன் மனைவி வித்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆருத்ரா என்ற மகள் இருந்தாா். இந்த நிலையில், வித்யா திங்கள்கிழமை தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது மாடியில் துணிகளை காயவைப்பதற்காக சிறுமி ஆருத்ராவுடன் மாடிக்குச் சென்று குழந்தையை விட்டுவிட்டு துணிகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாடிப் படிக்கட்டின் பக்கவாட்டு இரும்பு கம்பிகளுக்கிடையே சென்ற ஆருத்ரா தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.