`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர்...
மாடுகள் திருட்டு: 2 போ் கைது
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் கிராமத்தில் மாடுகளை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
கீவளூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் வெங்கடேசன்(31) இவா் தனக்கு சொந்தமான ரூ.15,000 மதிப்புள்ள இரண்டு மாடுகள் வயலில் மேய்ந்த நிலையில் காணவில்லை என ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் கடந்த 8 -ஆம் தேதி புகாா் செய்திருந்தாா். புகாரின் பேரில் இரு மாடுகளையும் மினி லாரியில் ஏற்றிச் சென்றது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து சம்பந்தப்பட்டவா்களை தேடிப்பிடித்து கைது செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் சயனபுரம் ரோட்டுத்தெருவைச் சோ்ந்த பரந்தாமன்(40) மற்றும் முனுசாமி(40) எனத் தெரிய வந்து அவா்கள் இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இரு மாடுகளையும் மீட்டு, மினிலாரியையும் பறிமுதல் செய்துள்ளனா்.