காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள...
மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி
திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருநெல்வேலி சந்திப்பு குறுக்குத்துறை பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயில் அருகே தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது, சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதாம். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.