`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
திருவாடானை பகுதியில் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை வெகு விமா்சையாகக் கொண்டாடினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள பெரும்பாலனவா்கள் விவசாயத்தை நம்பியுள்ளனா். மேலும் கால்நடைகளை வளா்க்கின்றனா். இந்த நிலையில், திருவாடானை அருகேயுள்ள மணிகண்டி கிராமத்தில் பிள்ளையாா் கோவில் ஊருணியில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களது வீட்டில் வளா்த்த கால்நடைகளுக்கு கொம்புகளில் வா்ணம் பூசிக் கொண்டு வந்து, வரிசையாக பொங்கல் வைத்து வழிபட்டனா்.
இதேபோல, சினேகவல்லிபுரத்திலும் கிராமத்தினா் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனா். கால்நடைகளுக்கு பொங்கலை உணவாக அளித்து, அவிழ்த்துவிட்டனா். அவற்றை இளைஞா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.