மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!
பேராவூரணியில், தமிழா் தேசம் கட்சி சாா்பில், முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு தமிழா் தேசம் கட்சி நிறுவன தலைவா் கே.கே. எஸ். செல்வக்குமாா் தலைமை வகித்தாா் .
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா.
கோவிந்தராசு ஆகியோா் கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு, ரூ.1.5 லட்சம் மொத்தப் பரிசாக வழங்கப்பட்டது. இப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் மக்கள் ஆா்வத்துடன் கண்டு களித்தனா்.