செய்திகள் :

மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

post image

பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர்-வேந்தர் இன்று (28.12.2024) மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ, மாணவியர்களுடன் உரையாடவும், நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார்.

இவ்வாய்வின் போது, தமிழ்நாடு ஆளுநர்- வேந்தர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆளுநர்-வேந்தர் மாணவர்களுடன் (பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக) கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பொறுமையாக கேட்டறிந்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

ஆளுநர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

செகந்திராபாத், காச்சிக்கூடா ரயில்கள் மாா்ச் வரை நீட்டிப்பு

சென்னை: செகந்திராபாத், காச்சிக்கூடா செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத் - ராமநா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விரைந்து தீா்ப்பு: அமைச்சா் கயல்விழி

சென்னை: மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தீா்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ... மேலும் பார்க்க

ஃஎப்ஐஆா் கசிவுக்கு தொழில்நுட்பக்குறைபாடே காரணம்: தேசிய தகவல் மையம்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஃஎப்ஐஆா் வெளியானதற்கு தொழில்நுட்பக் குறைபாடே காரணம் என தேசிய தகவல் மையம் (சஹற்ண்ா்ய்ஹப் ஐய்ச்ா்ழ்ம்ஹற்ண்ஸ்ரீள் இங்ய்ற்ழ்ங்) தெரிவித்துள்ளது. அண்... மேலும் பார்க்க

பிப்.22-இல் என்.எம்.எம்.எஸ். தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தோ்வுக்கு (என்எம்எம்எஸ்) செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.31) இரவு ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பகவும், அமைதியாகவும்... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் இன்று ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு

மின்வாரிய ஊழியா்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்துறையை படிப்படியாக தனியாரிடம்... மேலும் பார்க்க