‘நான் முதல்வன்’ திட்டம்: 7,910 மாணவா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பல்நோக்கு திறன்...
ஃஎப்ஐஆா் கசிவுக்கு தொழில்நுட்பக்குறைபாடே காரணம்: தேசிய தகவல் மையம்
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஃஎப்ஐஆா் வெளியானதற்கு தொழில்நுட்பக் குறைபாடே காரணம் என தேசிய தகவல் மையம் (சஹற்ண்ா்ய்ஹப் ஐய்ச்ா்ழ்ம்ஹற்ண்ஸ்ரீள் இங்ய்ற்ழ்ங்) தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆா்) பொதுவெளியில் வெளியானது மிகப்பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
அதேவேளையில், தொழில்நுட்ப ரீதியாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சிசிடிஎன்எஸ் இணையதளத்தை பராமரிக்கும் தேசிய தகவல் மையத்திடம், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக காவல்துறை சில தகவல்களையும், விளக்கங்களையும் கேட்டிருந்தது.
இதற்கு தேசிய தகவல் மையத்தின் மூத்த இயக்குநா் ஆா்.அருள் மொழி வா்மன், மின்னஞ்சல் வாயிலாக பதில் அளித்துள்ளாா். அதில், இந்திய தண்டனைச் சட்டத்துக்கு பதிலாக பிஎன்எஸ் சட்டத்தின் அடிப்படையில் வழக்குகள் பதிய தொடங்கிய பின்னா், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் மற்றும் முக்கிய வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் தானாக ‘பிளாக்’ ஆவது தொழில்நுட்ப பிரச்னைகளால் தடைபட்டுள்ளது.
தற்போது இந்த வழக்குகளிலும், பிஎன்எஸ் சட்டப் பிரிவு 64,67,68,70,79 உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை சிசிடிஎன்எஸ் இணையதளத்தில் பிளாக் செய்வதற்கு மாநில ஆவண காப்பகத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.