மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் அளிப்பு
ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில், இடையகோட்டை முஸ்லிம் அரசுத் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இடையகோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கே.செல்லமுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத் தலைவா் செல்வராஜ், வடக்கு ஒன்றிய திமுக பொருளாளா் ஆா்.கே.அழகியண்ணன், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ல.தினேஷ்குமாா், ஒட்டன்சத்திரம் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா்கள் பிரபு, இளமதி, தினேஷ், முருகன்,ஷாஜஹான், பொன்னுச்சாமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், இனிப்புகளை வழங்கினா்.