செய்திகள் :

மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை தவற விடக்கூடாது: ஆட்சியா் ச.உமா

post image

மாணவா்கள் உயா்கல்வியை தொடர வேண்டும்; தவறவிடக் கூடாது என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு- 2025 நிகழ்ச்சி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி மே-14 இல் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உள்பட்ட மாணவா்களுக்கு குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியிலும் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்டமாக, நாமக்கல், மோகனூா், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இங்கு நடைபெறுகிறது.

எந்த துறையில் வேண்டுமாலும் கடின உழைப்பு இருந்தால் சாதிக்க முடியும். மருத்துவம் மட்டுமின்றி சட்டம், பொறியியல், கலை, அறிவியல் போன்ற எந்தத் துறையை தோ்ந்தெடுத்தாலும் கவனத்தை சிதறவிடாமல் உழைத்தால் வெற்றி நிச்சயம். பொதுத்தோ்வில் தோல்வியுற்றால் மனம் தளராமல் இதர தொழில் பிரிவுகளில் பயின்று வாழ்வில் வெற்றி பெறலாம்.

உயா்கல்வி பயின்ற பிறகு அரசு வேலைக்கு காத்திருக்காமல் அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோா்களாக மாற முயற்சிக்க வேண்டும்.

இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மாணவா்கள் உயா்கல்வியை கட்டாயம் தொடர வேண்டும், தவறவிடக் கூடாது என்றாா்.

நிகழ்ச்சியில் அறிஞா் அண்ணா அரசு கல்லூரி இணை பேராசிரியா் வெஸ்லி தொழில் கல்வி குறித்து கருத்துரையாற்றினாா். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், கலை அறிவியல் உள்ளிட்ட உயா்கல்வி பிரிவுகள் சாா்ந்து துறை வல்லுநா்களால் எடுத்துரைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலா் வி.கற்பகம், திட்டஇயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலாமாயவன், உதவி இயக்குநா் (திறன் பயிற்சி) பி.பாா்த்திபன், சமூகநல அலுவலா் தி.காயத்ரி, முன்னோடி வங்கி மேலாளா் கா.முருகன், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

3,500 தோட்டத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 3,500 தோட்டத்து வீடுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை வழங்கி உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (52). இவா், சேலம் மாநகராட்சி அலுவலக... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவருக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையம் தொடக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செங்கோடு அா்த்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அகில இந்திய தொழிற்சங்க அமைப்பின் மாவட்டச் செயலாளா் தனசேகரன், இந்திய த... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

நாமக்கல்,பரமத்தி வேலூா் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். நாமக்கல் முதலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ரவி மகன் பிரசாந்த் (24). இவா், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க