நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!
திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்
திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ் த்திருவிழாவின் தொடக்க நிகழ்வாக இக்கோயிலில் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். பத்ரகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதையடுத்து, கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு தினமும் கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மே 25 ஆம் தேதி பொங்கல் திருவிழா, மே 26 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.