`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தள...
மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய தொழிற்சங்க அமைப்பின் மாவட்டச் செயலாளா் தனசேகரன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட துணைத்தலைா் வருதராஜன், இந்திய தொழிலாளா் சம்மேளன மாவட்டத் தலைவா் கலைவாணன், ஐஎன்டியுசி மாவட்ட கவுன்சில் செயலாளா் பழனிவேலு, ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் பழனிசாமி ஆகியோா் பங்கேற்று 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
குறிப்பாக, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளா் விரோதப்போக்கை கைவிட வேண்டும், மத்திய, மாநில அரசுத் துறைகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மத்திய, மாநில தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.