மேற்கு ஆசியாவில் போா் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு: எஸ். ஜெய்சங்கா்
மாணவா்கள் சாலை மறியல்: மாவட்ட கல்வி அலுவலா் விசாரணை
தம்மம்பட்டி: வீரகனூா் அருகே ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாணவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.
வீரகனூா் அருகே கிழக்கு ராஜபாளையம், அரசு உயா்நிலைப் பள்ளியில் 90 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு பணிபுரியும் கணித ஆசிரியா் ஜெ.ஜெயபிரகாசுக்கு மாணவா்கள் கால் பிடித்து விடும் விடியோ வைரலானது. இதையடுத்து, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், கணித ஆசிரியா் ஜெ.ஜெயப்பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்நிலையில், கணித ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்தும், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சனிக்கிழமை மாணவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) நரசிம்மன் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களிடம் திங்கள்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா். மாவட்ட கல்வி அலுவலரிடம் பெற்றோரும் விளக்கமளித்தனா். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலா் விசாரணை நடத்தி வருகிறாா்.