'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
மாணவா் விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்த கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மோமாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் அபினேஷ் (18). இவா், கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். இந்த நிலையில், அபினேஷ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனை மாணிக்கம் கண்டித்தாராம்.
இதில், மனமுடைந்த அவா் கடந்த ஜன.19-ஆம் விஷத்தை குடித்தாா். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.