Marina Food Festival 2024 - இவ்வளவு உணவு வகைகளா? | Spot visit | Vikatan
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவிடைமருதூா் அருகே உள்ள கடமாங்குடி வீராக்கன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாஜி மகன் பரமேஸ்வரன் (22) . இவா், அதே ஊரைச்சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுபற்றி மாணவி கடந்த டிச.19 இல் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
புகாரை விசாரணை செய்த ஆய்வாளா் துா்கா, இளைஞா் பரமேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.