செய்திகள் :

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை திசை திருப்ப முயற்சி: அண்ணாமலை

post image

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை திசை திருப்பும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம், சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்குப் பிறகு உறுதியாகிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: அண்ணா பல்கலை.யில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா், மற்றொரு நபருடன் கைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இதற்கு நோ்மாறாக, குற்றஞ்சாட்டப்பட்டவா் தனது கைப்பேசியை, ‘ஏரோப்ளேன் மோடில்’ வைத்திருந்ததாக, சென்னை காவல் ஆணையா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இவ்வழக்குக்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கை திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிா என்ற கேள்வி வலுப்படுகிறது என தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் ‘டிஜே’ இசை நிகழ்ச்சியை தவிா்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சா் க.பொன்முடி

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் நாட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சென்னை கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில், கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மீட்க... மேலும் பார்க்க

ஜன.13 வரை மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் வரும் 13- ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்பு: கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் எம்டி, எம... மேலும் பார்க்க

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திமுக ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுறுத்தல்

ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி வலியுறுத்தினாா். சட்டப் பேரவையில் ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்தும், ஆளுநருக்கு ஆதரவளிக்கும் அதிமு... மேலும் பார்க்க