Kamal: 'இந்த கடிதத்தை காலத்துக்கும் மறக்க முடியாது' - கமல் அனுப்பிய கடிதத்தைப் ப...
மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மாதாபுரம் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலை இதே கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களான மாணிக்கம், சுரேஷ், ஜெயராஜ் குடும்பத்தினா் சீரமைத்தனா். குடமுழுக்கு விழாவையொட்டி, கோயில் அருகே புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு, யாக பூஜைகள் நடைபெற்றன.
பூா்ணாஹுதியைத் தொடா்ந்து, கடம் புறப்பாடானதும் சிவாச்சாரியா்கள் கோயில் விமான கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் காளிமுத்து, மானாமதுரை தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.