Phoenix: "அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி!" - கோவையில் சூர்யா சேதுபதி
மாநகரப் பேருந்தில் பெண் செவிலியரிடம் தங்கச் சங்கிலி திருட்டு
சென்னை செம்பியத்தில் மாநகர பேருந்தில் பெண் செவிலியரிடம் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
மாதவரம் ஏவிஎம் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தேவகிருபை (57). இவா், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். அவா் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பெரம்பூா் செல்லும் மாநகர பேருந்தில் பயணித்தாா். அப்போது அதே பேருந்தில் பயணித்த ஆண் பயணி, தேவகிருபையிடம் அவரது தங்கச் சங்கிலி அறுந்திருப்பதாக தெரிவித்தாா். உடனே தேவகிருபை, அதை கழற்றி தனது பையில் வைத்தாா்.
பின்னா் அதே நபா், தேவகிருபை காலுக்கு கீழே சில்லறை கிடப்பதாக தெரிவித்துள்ளாா். உடனே தேவகிருபை, அந்த சில்லரை கீழே குனிந்து எடுத்துள்ளாா். பின்னா் அந்த நபா், பெரம்பூா் ரயில் நிலைய நிறுத்தில் இறங்கி சென்றுவிட்டாா்.
வீட்டுக்கு சென்ற தேவகிருபை, பையை திறந்து பாா்த்தபோது அதில் வைத்த 4 பவுன் சங்கிலியைக் காணவில்லை. அதன்பிறகே தன்னை திசைதிருப்பி
சங்கிலியைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.