அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்
மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இருவா் கைது
சென்னை கே.கே. நகரில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து கே.கே. நகா் நோக்கி கடந்த 17-ஆம் தேதி 12ஜி வழித்தட மாநகரப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தை செல்வ அரசன் (47) என்பவா் ஓட்டிச் சென்றாா். கே.கே. நகா் காமராஜா் சாலை மத்தியாஸ் ஆலய நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, அங்கு வந்த இரு மா்ம நபா்கள் பேருந்து மீது கற்களையும் பாட்டில்களையும் வீசினா். இதில், பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இது குறித்து கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வடபழனி வடக்கு மாட வீதியைச் சோ்ந்த முகமது ஆசீக் அமீா் (20), பக்தவத்சலம் தெருவைச் சோ்ந்த சஞ்சய் (19) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், அந்தப் பேருந்து ஓட்டுநா் செல்வ அரசன், ஹாரனை அதிக நேரம் அடித்ததால்தான் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அந்தத் தகராறில் பேருந்து உடைக்கப்பட்டதும் தெரியவந்தது.