ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
`மாநகராட்சியாக மாறும் புதுச்சேரி நகராட்சிகள்!' – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவாதமும், எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தும் வருகின்றனர்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளம் ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோல புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், ``நீட் பயிற்சி பெறுவதற்கு இதுவரை 585 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் இரண்டு, கிராமப்பகுதிகளில் இரண்டு மற்றும் காரைக்காலில் ஒரு நீட் பயிற்சி மையங்கள் அரசு சார்பில் உருவாக்கப்படும். மேலும் 2025 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்” என்றார்.