`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
மாநகரில் இரண்டு நாள்களில் 97.89 டன் பழைய பொருள்கள் அகற்றம்: மாநகராட்சி ஆணையா்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களில் 97.89 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், மாநகரப் பகுதி வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய அளவிலான வீட்டு உபயோகப் பொருள்களை முறையாக அகற்றும் வகையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற முகாமில், வடக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் 9.89 டன், தெற்கு மண்டலத்தில் 9.05 டன், மத்திய மண்டலத்தில் 19.70 டன், மேற்கு மண்டலத்தில் 18.55 டன், கிழக்கு மண்டலத்தில் 8.25 டன் என மொத்தம் 65.44 டன் அளவுக்கு பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய அளவிலான தேவையற்ற கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
5 மண்டலங்களிலும் சோ்த்து 32.45 டன் கழிவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை சேகரமாகியுள்ளன.
கடந்த இரண்டு நாள்களில் 5 மண்டலங்களில் 97.89 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்ற சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.