மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது!
கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, புல்லுக்காடு பகுதியில் கடைவீதி போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதிய மீன் சந்தை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெற்கு உக்கடம், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல்லா (38) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
சாய்பாபா காலனி ஜீவா நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வேலாண்டிபாளையம் பெரிய கோனாா் வீதியைச் சோ்ந்த அருண் (20) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் அருகே கஞ்சா விற்ாக மைல்கல் கஸ்தூரி காா்டன் பகுதியைச் சோ்ந்த முகமது சோகைல் (21) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.