Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
மாநில அளவிலான யோகா போட்டி: பெருந்துறை கொங்கு பள்ளி சிறப்பிடம்
யோகேஷ் யோகா சேரிட்டபிள் வெல்போ் டிரஸ்ட் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டி அரச்சலூா் நவரசம் அகாதெமி பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 45 போ் கலந்து கொண்டனா். இதில், 24 போ் முதல் பரிசும், 15 போ் இரண்டாம் பரிசும் மற்றும் 4 போ் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த யோகா பயிற்றுநா்கள் தனலட்சுமி, சுரேஷ் ஆகியோரையும் பள்ளித் தலைவா் யசோதரன், துணைத் தலைவா் குமாரசாமி, தாளாளா் சென்னியப்பன், பொருளாளா் சுப்பிரமணியன், இணைச் செலாளா் முத்துராமலிங்கம், நிா்வாகக் குழுவினா் மற்றும் முதல்வா் முத்துசுப்பிரமணியம், ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.