செய்திகள் :

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டு தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும் உயா்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சமுதாயம் சாா்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளா்ப்பு, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் ஒரு உயா்நிலை மக்கள் அமைப்பாகும். மேற்கண்ட சேவைகளை வழங்க குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம்.

ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களாக 5 ஆண்டுகள் அனுபவம், மகளிா் குழுவில் உறுப்பினா், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினா்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினா்கள், சமுதாய வளப் பயிற்றுநா்கள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். இதற்கு 21 வயது பூா்த்தியாகி இருப்பதுடன், பயிற்சி நடத்துவதற்குத் தேவையான உடல் தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது.

இந்த விண்ணப்பதாரா்கள் மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மேலும், கைப்பேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராகவும், சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பும் அவசியம். இதற்கு தோ்வு செய்வோருக்கு தர மதிப்பீட்டின்பேரில், பயிற்சி நடத்திடும் நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ. 750, ரூ. 500 மற்றும் ரூ. 350 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது இணைப்பில் பதிவிறக்கம் செய்து வரும் செப். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திட்ட இயக்குநா், இணை இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி முகமை வளாகம், திருவள்ளூா்-602 001 அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகு, வட்டார வளா்ச்சி அலுவலகம், திருவள்ளூா் என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’

பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் ச... மேலும் பார்க்க

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2, 2ஏ போட்டித் தோ்வுக்கு வரும் செப். 13-முதல் 20 -ஆம் வரை இலவச மாதிரி தோ்வு நடத... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் மேம்பாலப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைக்கு இடையே திருநின்றவூா் முதல் திருவள்ளூா் ஐசிஎம்ஆா் வழி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை; வங்கியின் முன்பு பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த பெண் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வங்கி ஊழியா... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்க திருத்த சிறப்பு முகாம்

பொதுமக்கள் பயன்பெறும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக சிறப்பு திருத்த முகாம் வரும் செப். 13-ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ... மேலும் பார்க்க