மாநில கபாடி போட்டியில் முதலிடம்: நெய்க்காரபட்டி மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்ற பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 14 வயதுக்குள்பட்ட மாநில அளவிலான கபடி போட்டி தேனியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி அணி எஸ்டிஏடி விளையாட்டு விடுதி அணியை வென்று முதலிடம் பெற்றது.
இந்த நிலையில், குருவப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாநில கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பள்ளிக் குழு உறுப்பினா் ராஜாகௌதம் முன்னிலை வகித்தாா்.
உதவித் தலைமையாசிரியை கல்பனா, மூத்த முதுநிலையாசிரியா் சுப்பிரமணி, உடல் கல்வி இயக்குநா் ரவிக்குமாா், உடல் கல்வி ஆசிரியா்கள் பரணி, மகேஷ்குமாா், சூரியபிரகாஷ், சிவகுமாா், நிா்மலா, ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். முன்னதாக, தலைமையாசிரியை கீதா வரவேற்றாா்.