திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு
காதலா் தினம்: கொடைக்கானலில் பூக்கள் விற்பனை தொடங்கியது
காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலில் உள்ள கடைகளில் பூக்கள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில் மலா்கள், கேக், கிப்ட் பொருள்கள் விற்பனை அதிகரித்துக் காணப்படும்.
இந்த நிலையில், காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளிலுள்ள கடைகளில் ரோஜா, கொய் மலா்கள் உள்ளிட்ட வண்ண, வண்ண மலா்கள் புதன்கிழமை விற்பனைக்கு வைக்கப்பட்டன.
இதுகுறித்து மலா்கள் வியாபாரிகள் கூறியதாவது: காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் வரும் காதலா்கள் ரோஜா, ஜொ்பரா, கொய் மலா்கள் உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுப்பா். இதனால், பூக்கள், கேக்குகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் காதலா்கள் அதிக அளவில் கூடுவா். ஒரு ரோஜாவின் விலை ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்தைவிட நிகழாண்டில் காதலா் தின மலா்கள் விற்பனை சற்று குறைவாகவே இருந்து வருகிறது என்றனா்.