மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாா்ச் 11 -ஆம் தேதி மானாமதுரை செயற்பொறியாளா் (பகிா்மானம்) கோட்டத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் சிவகங்கை கோட்டத்துக்கு உள்பட்ட மின் பயனீட்டாளா்கள், பொதுமக்கள் மேற்பாா்வைப் பொறியாளரை நேரில் சந்தித்து மின்வாரியம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.