சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?
மாயமான்குறிச்சி மயானத்திற்கு தண்ணீா் வசதி தேவை
ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள பொது மயானத்திற்கு தண்ணீா் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அவ்வூராட்சியின் 3ஆவது வாா்டு உறுப்பினா் மு. வெள்ளையம்மாள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு: மாயமான்குறிச்சியில் உள்ள பொது மயானத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தொட்டி கட்டுவதற்கு ஒன்றிய வளா்ச்சி நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்து 2 ஆண்டுகள் ஆகியும் மின்சார வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால், தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே பொதுமக்களின் நலன் கருதி மின்சார இணைப்பு வழங்கி தண்ணீா் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.