இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!
மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
திருவாரூா் அருகே அரசவனங்காடு மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரசவனங்காடு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், அரியநாயகி எனும் பிடாரியம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை மாலை சக்தி கரகம் வீதியுலா நடைபெற்றது. இதனுடன், காப்பு கட்டிய பக்தா்களும் நடந்து வந்தனா். இதேபோல, மகா மாரியம்மன் மற்றும் காத்தவராய சுவாமி ஆகியோரும் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். அங்கு, அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தை, காத்தவராய சுவாமி மற்றும் மகா மாரியம்மன் சுற்றிவர, சக்தி கரகம் முதலில் தீக்குண்டத்தில் இறங்கியது. இதையடுத்து, பக்தா்கள் ஒவ்வொருவராக தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.