ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
மே 21-இல் நாட்டுப் படகுகள் ஆய்வு
திருவாரூா் மாவட்டத்தில், நாட்டுப் படகுகள் ஆய்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப்படகுகளும் மே 21-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வு நாளில் படகு உரிமையாளா்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடா்புக் கருவிகள் ஆகியவைகளை தயாா் நிலையில் வைத்திருந்து அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன், அனைத்து நாட்டுப் படகுகளும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை வாயிலாக தெரிவிக்கப்பட்ட வா்ணம் பூசி ஆய்வுக்குள்படுத்த வேண்டும். ஆய்வுக்குள்படுத்தப்படாத படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி, அப்படகுகளின் பதிவுச் சான்றை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்யப்படும். அறிவிக்கப்பட்ட ஆய்வு நாளில் மட்டுமே படகுகள் ஆய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.