திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்
உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்தாா்.
அதையேற்று, கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் காதொலிக் கருவியை ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் 16.04.2025 மற்றும் 17.04.2025 இரு நாள்கள் நடைபெற்றது. இதில்ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பங்கேற்று பல்வேறு பகுதிகளில் நேரில் கள ஆய்வு செய்தாா்.
உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட உளுந்தாண்டவா் கோவில் பகுதியில் வசித்து வரும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி பிரியதா்ஷினி காதொலிக் கருவி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
அவரது கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து மாணவிக்கு காதொலிக் கருவி வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து அந்த மாணவியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வரவழைத்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.6,000 மதிப்புள்ள விலையில்லா காதொலிக் கருவியை மாணவிக்கு வழங்கினாா். அப்போது, முடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன் உடனிருந்தாா்.