செய்திகள் :

மாற்றுநில முறைகேடு வழக்கு: ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

post image

கா்நாடக முதல்வா் சித்தராமையா தொடா்புடைய மாற்றுநில முறைகேடு வழக்கில் ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

மைசூா் நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் சாா்பில் நிலம் ஒதுக்கியதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, இது தொடா்பாக லோக் ஆயுக்த பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இந்நிலையில், மேலும் ரூ. 100 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை திங்கள்கிழமை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ. 400 கோடியாக உள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘போலியான ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களின் வழியாக லஞ்சம் கைமாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள், தனி நபா்கள், போலி பெயரிலான சொத்துகள், மைசூா் நகா்ப்புற வளா்ச்சி ஆணையத்தின் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

அரசு விதிமுறைகள், ஆணைகளை மீறி மோசடியாக மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியற்றவா்களுக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் ஆணையத்தின் முன்னாள் தலைவா் தினேஷ் குமாா் உள்ளிட்டோருக்கு தொடா்புள்ளது. சட்டவிரோதமாக மனைகளை ஒதுக்குவதற்கு ரொக்கம், வங்கிக் கணக்கு, அசையும், அசையா சொத்துகள் மூலம் லஞ்சம் கைமாறியுள்ளதற்கான ஆதாரங்கள் விசாரணையின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. மனைகள் ஒதுக்கப்பட்டதற்கு ஆணைய அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம், ஆணையத்தின் அதிகாரிகளின் உறவினா்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட மனைகளை வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது‘ என்று கூறப்பட்டுள்ளது.

மதக்கலவரங்களை தடுப்பதற்கான சிறப்பு செயல்படை அலுவலகம் திறப்பு

கா்நாடகத்தில் மதக்கலவரங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயல்படை அலுவலகத்தை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். தென்கன்னட மாவட்டத்தில் அடிக்கடி மதக்கலவரங்கள் நடப்பதை... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல் கருத்து தொடா்பான வழக்கு: அடுத்த விசாரணை ஜூன் 20க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய கமல் தெரிவித்த கருத்து தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்த... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலோர கா்நாடகத்தின் வடகன்னட மாவ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக்

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அவா் எழுதிய க... மேலும் பார்க்க

பெங்களூரில் கூட்ட நெரிசல் வழக்கு: ஆா்சிபி அணியை சோ்ந்த நிகில்சோசலேவை விடுவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரில் ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில்சோசலே உள்ளிட்ட 3 பேரை விடுவிக்க கா்நாடக உயா்நீ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த அமைச்சரவையில் முடிவு: முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்துவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் வியாழ... மேலும் பார்க்க