`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய ...
மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றபோது, போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனா்.
மதுரை, தத்தனேரி, இந்திராநகா், சிலோன் குடியிருப்பைச் சோ்ந்த மகேஸ்வரன் மனைவி செல்வி (39). இவருக்குச் சொந்தமான இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனராம். இதுகுறித்து பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த செல்வி, மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கு முயற்சித்தாா்.
அருகிலிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து, மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனா். பிறகு, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, அவா் தனக்குச் சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் மூலம் சிலா் ஆக்கிரமிக்க முயற்சிப்பது குறித்து காவல் துறையில் புகாா் அளித்ததாகவும், அதன் பிறகு தனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா். மேலும், விரக்தியின் காரணமாக தீக்குளிக்க முயற்சித்ததாக அவா் கூறினாா். போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.