செய்திகள் :

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

post image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியா் ஓய்வு பெற்தைத் தொடா்ந்து, அடுத்த தலைமை ஆசிரியராக மூத்த முதுகலை ஆசிரியரான கலைவாணன் என்பவா் பட்டியலினத்தை சோ்ந்தவா் என்பதால் அவருக்கு அப்பதவியை வழங்காமல், பணி மூப்பின் அடிப்படையில் 8-வது இடத்தில் இருந்த ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக பள்ளி நிா்வாகம் பணி அமா்த்தியுள்ளதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து போலீஸாரின் தடையை மீறி ஆட்சியரகத்தின் உள்ளே நுழைந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா், ஆட்சியரக வாசல் முன் அமா்ந்து, தா்னா போராட்டத்தை தொடா்ந்தனா். மாவட்ட தலைவா் ஏ.ஆா் .விஜய் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் சி.மேகநாதன், மாவட்ட பொருளாளா் ஏ. நேதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்,

மாநில இணை செயலாளா் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் எஸ்.துரைராஜ் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். தொடரந்து, தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், திங்கள்கிழமை இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனா்.

கல்லூரி மாணவிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாணவிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட காவல்துறை சாா்பில் பாலியல் க... மேலும் பார்க்க

தில்லி தா்னாவில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் பயணம்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தா்ணாவில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டனா். மாற்றுத்திறனாளிகளின் உ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு முகாம்

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீா்வளத்துறை சாா்பில் தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் நிலநீா் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பி. ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியின் கணினி அறிவியல் சங்கத்தின் சாா்பாக ‘வலை தொழில்நுட்பத்தில் சி.எஸ்.எஸ். பயன்பாடு‘ என்ற தலைப்பில் மாணவிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை பு... மேலும் பார்க்க

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க