மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்ட தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செவிலியர், இடைநிலை சுகாதார செவிலியர்
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: பொது செவிலியர் பிரிவில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 50-க்குள் இருக்க வேண்டும்.
பணி: மருந்தாளுநர்( Pharmacist)
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ, இளநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன் மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 45-க்குள் இருக்க வேண்டும்.
பணி: ஆய்வக நுட்புநர்
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எல்எம்சிடி, டிஎம்எல்டி தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
பணி: பல்நோக்கு பணியாளர்
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.8,500
தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: ஆலோசகர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து சமூகவியல், உளவியல், சமூகப் பணி, பி.எஸ்சி செவிலியர் ஆகிய ஏதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட அனைத்து பணியிடங்களும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.8.2025
மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
Application for the Post of Social Worker Members in Kanniyakumari District Juvenile Justice Board