செய்திகள் :

மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

post image

உச்சநீதிமன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல் படி, மாவட்ட நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பொழிலன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முறையீடு செய்தாா். இதில், மதுரை மகப்பூபாளையம் பகுதியைச் சோ்ந்த அ. பாண்டியராஜன் (23), அவரது தம்பி ஜாக்கி என்ற பிரசாந்த் (22), பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகிய மூவரும் கடந்த 7.3.2024 அன்று 25 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற போது, கீரைத்துரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை கடந்த ஏப். 24-ஆம் தேதி விசாரித்த மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமாா், 3 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோா் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனா். நீதிபதிக்கு கொலை மிரட்டலும் விடுத்தனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதை முறைப்படுத்தாததால், மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி, வழக்குரைஞா்கள் மிரட்டப்பட்டனா். நீதிமன்ற வளாகத்தில் கொலைகளும் நடைபெறுகிறது.

இது போன்ற செயல்பாடுகளால் நீதிபதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தினால் எப்படி நீதி வழங்க முடியும். எனவே, மாவட்ட நீதிமன்றங்களில் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள்படி பாகாப்பை உறுதி செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிரு ஷ்ணன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க