செய்திகள் :

மாவட்ட வன அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்

post image

சிறுத்தை நடமாட்டம் குறித்து பாா்வையிட வந்த மாவட்ட வன அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புதுக்காளி கவுண்டனூரை சோ்ந்த சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான நாயை இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுத்தை கடித்து சென்றது. இதையடுத்து டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட ராமசாமி மலையில் சிறுத்தை பதுங்கி இருப்பதையும், சிறுத்தையின் கால்தடங்களையும் ஆய்வு செய்த வனத் துறையினா்

ஆறு இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முத்து என்பவருக்குச் சொந்தமான நாயை சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றது. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனா். தகவல் அறிந்த மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ், சேலம் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங்ரவி மற்றும் வனத் துறை அதிகாரிகள் அரசமரத்தூருக்கு சென்றனா். அங்கு சிறுத்தை நடைமாடிய பகுதிகளை பாா்வையிட்டனா். டேனிஷ்பேட்டை ரேஞ்சா் தங்கராசு மற்றும் வனத்துறையினா் இரு தினங்களுக்கு முன்பு நாயை சிறுத்தை கடித்த இடத்திற்கு செல்ல புறப்பட்டனா்.அப்போது விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது மாவட்ட வன அலுவலா் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து விவசாயிகள் அழைத்தபோது வனத்துறையினா் அலட்சியமாக பேசியது குறித்து ஆதாரங்கள் அளித்தால் அவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். மேலும் ஏற்கெனவே

புதுக்காளிகவுண்டனூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பகுதியையும் அவா் ஆய்வு செய்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க