ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூா் மாவட்டச் செயலாளா் தோ்வு!
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளராக சி.மூா்த்தி வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக் குழு கூட்டம் திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஜெயபால் தலைமை வகித்தாா். இதில், மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தற்போதைய மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக அந்தப் பொறுப்பில் இருந்து விடுபட்டாா். இதையடுத்து, கட்சியின் திருப்பூா் மாவட்ட புதிய செயலாளராக சி.மூா்த்தி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். அத்துடன் மாவட்ட செயற்குழு உறுப்பினராக கி.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினராக எஸ்.பிரவீன்குமாா் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.