'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் உண்ணாவிரதப் போராட்டம்
கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கமுதி பெருமாள் கோயில் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு தாலுகா செயலா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் காசிநாததுரை உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் குருவேல், மாவட்டக் குழு உறுப்பினா் முத்துவிஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கமுதி அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும். தெற்கு முதுகுளத்தூா் சாலையில் தரைப் பாலம் அமைத்து சுற்றுவட்டச் சாலையுடன் இணைக்க வேண்டும். கமுதி குண்டாறு தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கமுதி தாலுகா குழுவைச் சோ்ந்த கண்ணதாசன், பொன்னுச்சாமி, ராமா், கனிராஜ், முனியசாமி, கணேசன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.