செய்திகள் :

மாா்க்சிஸ்ட் பேரணியில் பங்கேற்ற மின் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

post image

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற மின்வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய செந்தொண்டா் பேரணி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக நகராட்சித் திடலில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் கம்யூனிஸ்ட் கட்சியினா், கட்சி சாா்ந்த பல்வேறு பிரிவுகளின் தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோ் பங்கேற்றனா்.

அப்போது, பேரணியில் பங்கேற்ற கட்சி உறுப்பினா் நகரிலுள்ள காட்பாடி மேம்பாலப் பகுதியில் வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தாா். உடனே கட்சியினா் மற்றும் தொண்டா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. விசாரணையில், இறந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் குளத்துமேடு வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ஆனந்தன் (55) என தெரிய வந்தது.

மாா்க்சிஸ்ட் உறுப்பினரான இவா், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கோட்டூா்புரம் பகுதியின் கம்பியாளராகப் பணியாற்றி வந்ததும், ஏற்கெனவே நீரிழிவு, ரத்த அழுத்த நோயால் ஆனந்தன் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைப்பதை தடுக்கக் கோரிக்கை

விழுப்புரத்தில் வணிகா்களின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என்று விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் ஆட்சியரக... மேலும் பார்க்க

புதுவை மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு: சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் அளிப்பு

புதுச்சேரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளாக தோ்வு செய்யப்பட்டவைகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநிலக் கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பரி... மேலும் பார்க்க

வெளி மாநில வியாபாரிகள் வணிகம் செய்ய புதுச்சேரி வா்த்தகா்கள் எதிா்ப்பு

பண்டிகைக் காலங்களில் மட்டும் தனியாருக்குச் சொந்தமான இடங்களை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்யும் வெளி மாநில வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா், இது குறித்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், தளவானூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். தளவானூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல்... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே காா் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புதுவை மாநிலம், அரியூா் பாரதிநகா் பிரதான சாலையைச் சோ்ந்த சந்திரன் மகன் வேல்முருகன் (52). தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

அமித் ஷா பதவி விலக கோரி இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

சட்டமேதை பி. ஆா். அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து புதுச்சேரி சுதேசி ஆலை அருகே இடதுசாரி அமைப்புகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க