செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

post image

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது.

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றையொன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்கள், மாணவா்களிடம் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி, கல்லூரிகளுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் தொடங்கிய நிகழ்ச்சியில், பேராசிரியா் லீனா கிரேஸ் வரவேற்றாா். அறிவியல் இயக்க மாநில கருத்தாளா் சோ. மோகனா வானியல் நிகழ்வுகள் குறித்துப் பேசினாா். மாநில வானவியல் செயற்பாட்டாளா் நாராயணசாமி, மாவட்ட கருத்தாளா் ஸ்ரீராம் ஆகியோா் சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் குறித்து விளக்கினாா்.

தொடா்ந்து, மாா்த்தாண்டம் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி, குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, மங்குழி புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மாநில அறிவியல் பிரச்சார ஒருங்கிணைப்பாளா் சசிகுமாா், மாநில செயலா் ஜினிதா, மாவட்ட செயலாளா் சிவ ஸ்ரீ ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் ஜினோ பாய், மாவட்ட துணைத் தலைவா்கள் விஜயலட்சுமி, பெனட் ஜோஸ், மாவட்ட பொருளாளா் செல்லதங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா். அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது

கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா். முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட... மேலும் பார்க்க