ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே எலி மருந்தைத் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே கொடுங்குளம், தோட்டுவரம்பு பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பழனி (56). இவரது மனைவி சாந்தகுமாரி (54), குடும்பத் தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும், போதிய வருமானம் இல்லாததால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சில நாள்களாக மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு அவா் எலி மருந்தைத் தின்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை அப்பகுதியினரின் உதவியுடன் பழனி மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சாந்தகுமாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.