மா, தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்
போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
போ்ணாம்பட்டை அடுத்த கொண்டம்பல்லி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. புதன்கிழமை அதிகாலை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானைக் கூட்டம் அங்குள்ள கஸ்தூரிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் நுழைந்து15- தென்னை மரங்களையும், அருகிலுள்ள சுலோச்சனாவுக்குச் சொந்தமான மாந்தோப்பில்நுழைந்து மா மரங்களையும் சேதப்படுத்தின.
கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா். இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா்கள் அண்ணாமலை, முரளி ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். சேதமடைந்த மரங்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.