செய்திகள் :

மிகக் குறுகிய காலத்தில் நிறைவடையும் மீனாட்சி சுந்தரம் தொடர்!

post image

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி சுந்தரம் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் நடிகர் எஸ்.வி. சேகர், ஷோபனா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மீனாட்சி சுந்தரம் தொடரில் நடிகை ஷோபனாவுக்கு ஜோடியாக எஸ்.வி. சேகர் நடிக்கிறார்.

தொடரின் கதையின்படி, 76 வயதான எஸ்.வி. சேகர், 26 வயது ஷோபனாவை திருமணம் செய்கிறார். கதைக்களம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தத் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், மீனாட்சி சுந்தரம் தொடர் இந்த வார இறுதியில் வரும் ஆக. 23 ஆம் தேதி பரபரப்புக் காட்சிகளுடன் நிறைவடைகிறது.

மீனாட்சி சுந்தரம் தொடர் கடந்த ஏப்ரம் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், 4 மாதங்கள்கூட ஆகாத நிலையில், நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மறுஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பெறுகின்றனவா?

The end of Meenakshi Sundaram, which was aired on Kalaignar TV, has come as a bit of a shock to fans who watch the series.

சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா!

நடிகை ரெஜினா கேசண்ட்ரா சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா கேசண்ட்ரா தமிழில் 2005-ல் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந... மேலும் பார்க்க

மறுஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பெறுகின்றனவா?

தொலைக்காட்சிகளில் மறுஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான தொடர்களான கோலங்கள், திருமதி செல்வம் போன்றவை தொலைக்கா... மேலும் பார்க்க

தோல்வியால் அழுத நெய்மர்... ஆசுவாசப்படுத்திய மகனின் குறுஞ்செய்தி!

நெய்மர் விளையாடும் சன்டோஷ் எஃப்சி அணி 0-6 என மோசமாக தோல்வியடைந்ததிற்கு அவரது மகன் ஆற்றுப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (33) தற்போது அவரத... மேலும் பார்க்க

சூர்யா படத்திற்கு இசையமைக்கும் சுஷின் ஷியாம்!

நடிகர் சூர்யாவின் 47வது படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிக் கொண்டாட்டம்! ஒன்றுகூடிய நடிகர்கள்!

பாக்கியலட்சுமி தொடரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக அத்தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரின் வெற்றி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இது ... மேலும் பார்க்க

கன்னட சினிமாவை ஷெட்டிகள் ஆள்கிறார்களா? ராஜ் பி. ஷெட்டி அசத்தல் பதில்!

நடிகர் ராஜ் பி. ஷெட்டி கன்னட சினிமா குறித்த கேள்விக்கு அசத்தலான பதிலளித்துள்ளார்.கன்னட திரைத்துறையின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் பெரிதாகியுள்ளது. பல புதிய படைப்பாளிகளின் கதை மற்றும் திரை உருவாக்கம்... மேலும் பார்க்க