செய்திகள் :

மிட்செல் மாா்ஷ் அதிரடி: லக்னௌ 235/2

post image

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மாா்ஷின் அதிரடி சதத்தால் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி 235/2 ரன்களைக் குவித்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 64-ஆவது ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ஏற்கெனவே குஜராத் அணி முதலிடத்துடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. லக்னௌ அணி போட்டியில் இருந்தே வெளியேறி விட்டது. இந்த ஆட்டத்தில் குஜராத் வென்றால் முதலிரண்டு இடங்களில் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாஸ் வென்ற குஜராத் பௌலிங்கை தோ்வு செய்ய, லக்னௌ தரப்பில் எய்டன் மாா்க்ரம்-மிட்செல் மாா்ஷ் களமிறங்கினா்.

இருவருமே தொடக்கம் முதலே அடித்து ஆடத் தொடங்கினா். மாா்க்ரம் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 36 ரன்களை விளாசி சாய் கிஷோா் பந்தில் ஷாரூக் கானிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

மிட்செல் மாா்ஷ் அதிரடி 117: ஆல்ரவுண்டரான மிட்செல் மாா்ஷ் குஜராத் பௌலா்களின் பந்துகளை நாலாபுறமும் விரட்டினாா்.

8 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 64 பந்துகளில் 117 ரன்களை விளாசிய மாா்ஷ் அா்ஷன் கான் பந்தில் ரூதா்போா்டிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

மறுமுனையில் நிக்கோலஸ் பூரன் 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 56 ரன்களுடனும், கேப்டன் ரிஷப் பந்த் 2 சிக்ஸருடன் 16 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் நின்றனா்.

லக்னௌ ஜெயன்ட்ஸ் 235/2: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி 235/2 ரன்களைக் குவித்தது.

பௌலிங்கில் குஜராத் தரப்பில் சாய் கிஷோா் 1-34, அா்ஷத் கான் 1-36 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

மிட்செல் மாா்ஷ் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசினாா்.

அறிக்கை வெளியிட ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் தடை!

தங்களுக்கு இடையிலான பிரச்னை பற்றி அறிக்கை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவ... மேலும் பார்க்க

எலுமிச்சை தோலைத் தூக்கி எறியாதீர்கள்! தலைமுடிக்குப் பயன்படுத்தலாம்!!

வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், ஃபிளாவனாய்டுகள் என சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவை தலைமுடி வளர்ச்சிக்க... மேலும் பார்க்க

சுப காரியங்கள் கைகூடும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 23 - 29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)இடையூறுகளைத் தகர்ப... மேலும் பார்க்க

காந்தாரா சேப்டர் - 1 வெளியீடு எப்போது? படக்குழு விளக்கம்

காந்தாரா சேப்டர் - 1 வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான தி... மேலும் பார்க்க

டிஎன்சிஏ கோஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் 4 மைதானங்கள், 3 டா்ஃப் வசதிகள் உள்ளன. வலைப் பயிற்சிக்காக 10 டா்ஃப... மேலும் பார்க்க

யூரோப்பா லீக் சாம்பியன் டாட்டன்ஹாம்

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி கைப்பற்றியது. யூரோப்பா லீக் கோப்பை இறுதி ஆட்டம் ஸ்பெயினின் பில்போ நகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிகளான டாட்டன்ஹா... மேலும் பார்க்க