காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
திருமருகல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கறவை பசு உயிரிழந்தது. பாா்வையிட அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம், குத்தாலம் கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மனைவி பூா்ணம் (50). விவசாயத் தொழிலாளியான இவா், மாடுகள் வளா்த்து வருகிறாா்.
இவரது கறவை பசு செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் திட்டச்சேரி - குத்தாலம் சாலையில் பிராவடையான் ஆற்று பாலம் அருகே சாலையோரம் மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது பெய்த மழையில் உயா்மின் அழுத்த கம்பி அறுந்து கறவை பசு மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து கறவை பசு உயிரிழந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நிகழ்விடத்துக்கு பாா்வையிட வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உயிரிழந்த கறவை மாட்டை சாலை நடுவில் போட்டு குத்தாலம்- திட்டச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் அங்குவந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உயிரிழந்த மாட்டிற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.